ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச், இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு பீகாரைச் சேர்ந்த அமன்குமார் ஒருவனிடம் ஜெர்மன் சுற்றுலா பயணி கேட்டார்.
அப்போது அந்த அமன்குமார் என்பவன் 'உங்களை வரவேற்கிறேன்' என்று ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் கூறினான். ஆனால் ஜெர்மன்காரர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வில்லை என்பதால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார்.
உத்தரபிரதேச சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சி தலைவரின் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருள் சிக்கியது.
உ.பி. சட்டப்பேரவையில் தினமும் பாதுகாப்பு சோதனை நடைபெறுவது வழக்கம். அதேபோல, இன்று பாதுகாப்பு சோதனையின் போது வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் சக்தி வாய்ந்த வெடி மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பு மற்றும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பிணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நடைபெற்றுள்ளது.
பிணத்தை கொண்டு செல்ல உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டது. போலீஸ்சார் கேட்டும் ஆம்புலன்ஸ் கிடைக்காது என்று மறுத்துவிட்டனர்.
போலீசாரின் தகவலின் படி அட்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய தண்டவாளத்தில் பிணம் கிடந்தது. இறந்தவரின் பெயர் ராமசரே என்பது பின்னர் கண்டறியப்பட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இறைச்சிக் கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசு 10 நாள்களில் முடிவெடுக்க வேண்டுமென்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு அமைத்த பின்னர் சட்ட விரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மற்றும் விற்பனை கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, தொடர்ச்சியாக சீல் வைக்கப்பட்டது. விமர்சனங்கள் எழுந்தாலும் சட்டவிரோதமாக செயல்பட்டவை மீதே நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலுக்குகான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
மோடியின் வாரணாசி, பார்லி., தொகுதி மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிப்பூரில் 1151 வாக்குச்சாவடி மையங்களும், உ.பியில் 14,458 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் மீண்டும் எங்கள் ஆட்சி அமையும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
3-வது கட்டமாக 69 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. மேலும் உத்தரபிரதேசத்தில் கிலோ 400 ரூபாய் வரையும், டெல்லியில் 250 ரூபாய் வரையும் உப்பு விற்கப்படுவதாகவும் மக்கள் மத்தியில் வதந்திகள் வந்தது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தை உ.பி முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
உத்தரபிரதேசத்தின் அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவின் தம்பி சிவ்பால் யாதவ் மூத்த மந்திரியாக தற்போது இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரி அகிலேசுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவுக்கும் இடையே பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் தற்போது சமாஜ்வாடி கட்சியை கலகலக்கச் செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த 2 கோவில் பூசாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி சுதா இவர் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கடுமையாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதனால் தனது தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.