சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 

Last Updated : Jan 4, 2017, 09:53 AM IST
சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது title=

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 
 
உத்தரபிரதேச மாநில சட்டசபையின் பதவிக்காலம் 2017 மே மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 3 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மார்ச் 18-ம் தேதியும், உத்தரகாண்ட் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 27-ம் தேதியும் முடிவடைகிறது. இந்த 5 மாநில சட்டசபைகளுக்கும் விரைவில்  தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் மார்ச் மாதம் 2-வது வாரத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் தேதிகளையும் அறிவிக்கிறது.

Trending News