உ.பி.யில் மீண்டும் எங்கள் ஆட்சி அமையும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
3-வது கட்டமாக 69 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சாய்பாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அதேபோல மாயாவதி அவர்களும் தனது ஓட்டை செலுத்தினார்.
வாக்குப்பதிவு செய்த பிறகு அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
இந்த தேர்தலில் 'சைக்கிள் ' முன்னோக்கி செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அனைத்து தொகுதிகளிலும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. முலாயமின் ஆசி எங்களுக்கு உள்ளது என அவர் கூறினார்.
We were ahead in first 2 phases and I am confident that we will be ahead in 3rd phase also:CM Akhilesh Yadav after casting vote in Saifai pic.twitter.com/Zc7PHjY7D2
— ANI UP (@ANINewsUP) February 19, 2017
Once again Samajwadi Party will be forming the Govt,in alliance with Congress: CM Akhilesh Yadav in Saifai pic.twitter.com/v4ooWRZNoI
— ANI UP (@ANINewsUP) February 19, 2017
இதேபோல முலாயமின் தம்பி சிவ்பால் யாதவ் கூறுகையில், இந்த தேர்தலில் சமாஜ்வாதி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.