Tragic Viral Video : இறப்பு, யாருக்கு எந்த தருணத்தில் எப்படி நேரும் என்பதே தெரியாது. சிரித்துக்கொண்டே இருப்பவர், சில நிமிடங்களில் இறந்து போகிறார், மகிழ்ச்சியில் திளைத்து ஆடிக்கொண்டிருப்பவர் திடீரென்று உயிரிழக்கிறார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மரணம், நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கும் போது மரணம் என நாளுக்கு நாள் இப்படி வினோதமான மரண செய்திகள் நமது வாயிற்கதை தட்டிக்கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது பெங்களூருவிலும் நடந்திருக்கிறது.
திருமண மேடையில் உயிரிழந்த வாலிபர்!
பெங்களூருவில், அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், வம்சி. இவர், தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள, ஆந்திராவில் இருக்கும் குருனூல் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு, மண மேடையில் மணப்பெண்ணுடன் நின்று கொண்டிருந்த நண்பனுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, கிஃப்ட் கொடுக்கும் தருவாயில் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ!
வைரலாகி வரும் அந்த வீடியோவில் நண்பன் கிஃப்டை பிரித்து பார்ப்பதற்காக தனது பிற நண்பர்களுடன் காத்துக்கொண்டிருக்கிறார். சிரித்துக்கொண்டே மணமக்களை பார்க்கும் அவர், சிறிது நேரத்தில் மயக்கம் வந்தது போல, பிறரிடம் ஏதோ கூறுகிறார். அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப்பிடிக்க, அப்படியே அந்த வீடியோ கட் ஆகிறது.
కర్నూలు జిల్లాలో స్నేహితుడి వివాహ వేడుకలో గుండెపోటుకు గురైన వ్యక్తి, ఆసుపత్రికి తీసుకువెళ్లగా గుండెపోటుతో మరణించినట్లు నిర్ధారించిన డాక్టర్లు.#Heartattack #Kurnool #AndhraPradesh #UANow pic.twitter.com/R0QGsv32sg
— ఉత్తరాంధ్ర నౌ! (@UttarandhraNow) November 21, 2024
அதன் பிறகு வம்சியை அங்கிருந்த தோன் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர், இதே போல 22 வயது மணமகன், தன் திருமணத்திற்கு முந்தைய நாள் மாரட்டைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்னொரு சம்பவத்தில், வீட்டில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர், அப்படியே தரையில் விழுந்து உயிரிழந்தார். இப்படி, எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | நாயை விரட்டப்போய் உயிரை விட்ட இளைஞர்!! இதயத்தை நிறுத்தும் வைரல் வீடியோ
மேலும் படிக்க | பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர் மரணம் - பயணிகளின் உயிர்காத்த நடத்துநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ