அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 3 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரின் காமோசோங் மாவட்டத்தில் உள்ள மாக்கான் என்னும் பகுதியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி.என்- ஐ.எம்) மற்றும் பி.எல்.ஏ -க்கு இடையில் ஆயுத பரிமாற்றத்தின் போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் தடை செய்யப்பட்ட மக்கள் சுதந்திர இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சுமார் 5.30 மணியளவில் இந்தோ-மியன்மார் சர்வதேச எல்லைக்கு அருகே, காம்மோ குல்லென் பொலிஸ் நிலையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் நடைபெற்றுள்ளது.
(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)
மணிப்பூரில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு : மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜ., 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்ததால், பா.ஜ.,வின் பலம் 33 ஆக அதிகரித்தது. பா.ஜ.,வின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.
மணிப்பூரில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு : மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜ., 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள்
ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்ததால், பா.ஜ.,வின் பலம் 33 ஆக அதிகரித்தது.
பா.ஜ.,வின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலுக்குகான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
மோடியின் வாரணாசி, பார்லி., தொகுதி மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிப்பூரில் 1151 வாக்குச்சாவடி மையங்களும், உ.பியில் 14,458 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு காலை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
தொடர்ந்து 7.42 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுகத்திதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கியது. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகின்ற மார்ச் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் தொகுதிகளில், 1,643 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்ல உள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.