ஹாங்க் காங்கை சேர்ந்த ஒரு நிறுவனம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனிதர்களை போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட சோபியா என்ற ரோபோவை அறிமுகம் செய்து வைத்தனர். தானாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு.
பின்னர், இந்த ரோபோவிடம் உனக்கு ஆபத்து வந்தால் மனிதர்களை அழிப்பையா? என்று கேட்டதற்கு, அந்த ரோபோ கொபத்துடம் ஆமாம் என்று பதில் கூறியது. இதையடுத்து, இதை தடை செய்யுமாறு எதிர்ப்புகள் எழுந்தது.
இதையடுத்து, இதை உருவாக்கிய நிறுவனம் இதில் பல மாற்றங்களை செய்து மீண்டும் சோபியாவை அறிமுகம் செய்தனர். அந்த அறிமுக விழாவில் சொபியவே தன்னை அறிமுகம் செய்துகொண்டு, மற்றவர்களின் கேள்விக்கு நகைசுவையாகவும், ரசிக்கும்படியாகவும் பதில் கொடுத்தது.
இதை தொடர்ந்து, மீண்டும் ரோபோவிடம் மனிதர்களை அழிப்பாயா என்று கிட்ட பொது சோபியா, சிந்தித்து சாமர்த்தியமாய் பதில் கூறியதாம். சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபிய நிறுவனம் இந்த ரோபோவிற்கு குடியுரிமையும் வழங்கியுள்ளது. உலகத்திலேயே மனிதர்களை அடுத்து முதல் குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா மட்டும்தான்.
பினனர், பல தொலைகாட்சிகளில் பேட்டியளித்த இந்த ரோபோ தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் என்றும் அதற்கு தனது பெயரையே வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.