ப்ளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் போக்கோ எம்4 ப்ரோ ஸ்மெர்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் மீடியா டெக் ஹீலியோ ஜி96 செயலி மூலம் இயக்கப்படுவதோடு, 5,000எம்எஹெச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போக்கோ எம் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மூன்று மாடல்களில் விற்பனையில் உள்ளது. இந்த வகை போனின் அடிப்படை மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு வகை மாடலானது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.16,499க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. போனின் டாப்-எண்ட் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை ரூ.17,999 ஆகும்.
மேலும் படிக்க | பச்சை நிறத்தில் புதிய ஐபோன்! என்ன ஸ்பெஷல் இதில்?
இன்றைய விற்பனையின் ஒரு பகுதியாக, ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவபவர்களுக்கு உடனடி தள்ளுபடியாக ரூ.1,000 வழங்கப்படும். ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ப்ளிப்கார்ட் 5% தள்ளுபடி வழங்குகிறது. ஈஎம்ஐ செலுத்துபவர்கள் மாதம் ரூ.520 முதல் செலுத்திக்கொள்ளலாம். போக்கோ எம் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் முழு ஹெச்டி+ அமோல்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz டச் ஸேம்ப்ளிங் வீதம் மற்றும் 1000நிட்ஸ் nits ப்ரைட்னஸையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது மீடியா டெக் ஹீலியோ ஜி96 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8ஜிபி வரை எல்பிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 13 உடன் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது. மேலும் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000 எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. சிறந்த செல்பி எடுக்கும் அனுபவத்திற்காக போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமராவை கொண்டுள்ளது. இதில் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவுடன் 64எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, 2 எம்பி மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. இந்த போக்கோ எம் 4 ப்ரோ ஸ்மார்ட்போனானது பவர் பிளாக், கூல் ஊதா, போக்கோ மஞ்சள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR