வருஷம் முழுவதும் மின்சார கட்டணமே வராமல் இருக்கனுமா? இதை செய்தால் போதும்

Free Electricity: ஆண்டு முழுவதும் மின்சார கட்டணம் செலுத்தாமல், இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு ஒரு சூப்பரான வழி இருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 10, 2022, 05:56 PM IST
வருஷம் முழுவதும் மின்சார கட்டணமே வராமல் இருக்கனுமா? இதை செய்தால் போதும்  title=

Electric Bill: இப்போது இருக்கும் பொருளாதார பிரச்சனையில் பலருக்கும் மின் கட்டணம் செலுத்துவது கூட பிரச்சனையாக இருக்கிறது. அதனால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்றெல்லாம் இணையத்தில் அதிகம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு சூப்பரான ஒரு ஐடியா இருக்கிறது. ஆண்டு முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தலாம்.  

இலவச மின்சார உபயோகம்

அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் என்பது வந்துவிட்டது. நீங்கள் அதனை உபயோகப்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து நீங்கள் தாராளமாக விடுபடலாம். ஆனால், சோலார் பொருத்துவது பலருக்கும் இயலாத விஷயம். ஏனென்றால், சோலார் தகடுகள் பொருத்துவதற்கு கூடுதல் செலவாகும் என்பதால், மக்கள் தவிர்க்க முடியாமல் மின் கட்டணத்தை செலுத்த விரும்புகிறார்கள். 

மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

சோலார் எல்இடி விளக்கு

முழுமையாக சோலார் பேனல் பொருத்த முடியாதவர்கள் குறைந்தபட்சம் சோலார் பவர்டு எல்இடி விளக்கை பொருத்துவது குறித்து பரிசீலிக்கலாம். இந்த விளக்கு மோஷன் சென்சார் மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் எல்இடி விளக்கு. சூரிய ஒளி மூலம் இந்த விளக்கை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். விலை அதிகமாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். ஏனென்றால், இந்த சோலார் பவர்டு எல்இடி விளக்கின் விலை வெறும் 300 ரூபாய் மட்டுமே. இது உயர்தர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சாதனம்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்: அதிகரித்தது வசதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News