கூகுள் பிளே ஸ்டாரில் அவ்வப்போது ஆபத்தான செயலிகள் கண்டுபிடிப்பது வழக்கம். அந்தவகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட செயலிகளை தாக்கியிருக்கும் ஆபத்தான மால்வேர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "Goldoson" என்ற புதிய மற்றும் ஆபத்தான ஆண்ட்ராய்டு மால்வேர் கூகுள் ப்ளே ஸ்டோரில் நுழைந்து 60 ஆப்ஸை பாதித்துள்ளது. மொத்தம் 100 மில்லியன் பயனர்கள் இந்த மால்வேர் தாக்கியிருக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர்.
கோல்டோசன் மால்வேர்
கோல்டோசனைக் கண்டுபிடித்த McAfee இன் ஆராய்ச்சிக் குழுவின் கூற்றுப்படி, தீம்பொருள் நிறுவப்பட்ட செயலிகள், Wi-Fi மற்றும் புளூடூத்-இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் பயனர்களின் GPS இருப்பிடங்களில் தரவைச் சேகரிக்க முடியும். ஆபத்தான விஷயம் என்னவென்றால், பயனர்களின் அனுமதியின்றி மொபைலில் வரும் விளம்பரங்களை இந்த மால்வேர் கிளிக் செய்ய முடியும். இதன் மூலம் கோல்டோசன் மால்வேர் மிகப்பெரிய விளம்பர மோசடி செய்யலாம்.
மேலும் படிக்க | Xiaomi 13 Pro: அமேசானில் ஆஃர் டமாக்கா... 40% தள்ளுபடியில் சியோமி ஸ்மார்ட்போன்
கோல்டோசன் எப்படி வேலை செய்கிறது?
கோல்டோசன் மால்வேர் பாதித்த செயலிகளை ஒருவர் உபயோகப்படுத்தும்போது, அந்த யூசரின் இருப்பிட முகவரி, தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை அந்த மால்வேரால சேகரிக்க முடியும். உங்கள் மொபைலுடன் இணைக்கப்பட்ட மொபைல்களின் தகவல்களையும் இந்த மால்வேரால் சேகரித்துவிடும். இது ஆபத்தான விஷயம் என்பதால் கூகுள் நிறுவனம் இது குறித்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கோல்ட்சன் மால்வேர் பிரச்சனையில் இருந்து தபிக்கலாம்.
பாதுகாப்பு வழிமுறைகள்
கூகுள் பிளே ஸ்டாரில் நம்பகமான செயலிகளை மட்டுமே பதவிறக்கம் செய்ய வேண்டும். தேவையற்ற செயலிகள் மற்றும் அதில் வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். அவை மால்வேர் போன்ற ஆபத்தான பிரச்சனைகளுக்கு உங்களுக்கு இட்டுச் செல்லும். அடிக்கடி உங்கள் மொபைலை அப்டேட் செய்து கொண்டே இருங்கள். இது உங்களை மால்வேர் உள்ளிட்ட வைரஸ் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் படிக்க | ’சீக்கிரம் லட்சாதிபதியாகலாம்’ சாட்ஜிபிடி கொடுக்கும் ரூ.16 லட்சம் - விட்டறாதீங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ