ஒரு வருசத்துக்கு கவலையில்லை.. ஜியோவின் இந்த 2 திட்டங்கள்..

Jio Data Add On Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்களானால், இந்த 2 திட்டங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 2, 2022, 09:32 AM IST
  • இந்தத் திட்டங்களின் கீழ், ஒரு வருடம் முழுவதும் டேட்டா கிடைக்கும்
  • இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மொத்தம் 730 ஜிபி டேட்டா பெறலாம்.
  • இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம்.
ஒரு வருசத்துக்கு கவலையில்லை.. ஜியோவின் இந்த 2 திட்டங்கள்..  title=

Jio Recharge Plan: இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களை தான் பக்கம் ஈர்க்க சலுகையுடன் கூடிய பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதிக வேலிடிட்டி, ஒருநாள் வேலிடிட்டி, கூடுதல் டேட்டா, டேட்டா ஆட்-ஆன், ரீசார்ஜ் திட்டங்களுடன் மற்ற செயலிகளின் இலவச அணுகல் என வர்க்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய, அதற்கேற்ப திட்டங்களை கொண்டு வருகிறது. 

இந்த ரிலையன்ஸ் ஜியோ தனியார் டெலிகாம் நிறுவனத்தின் நீண்ட கால செல்லுபடியாகும் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களைப் பற்றிய தகவல்களை இன்று நாம் தெரிந்துக்கொள்ளுவோம். இந்த டேட்டா வவுச்சர்களின் சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டங்களின் கீழ், ஒரு வருடம் முழுவதும் டேட்டா செல்லுபடியாகும். 

மேலும் படிக்க: ஆன்லைன் ஷாப்பிங்கில் நடைபெறும் பித்தலாட்டம்! உஷார்

நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்களானால், இந்த 2 திட்டங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்திய பிறகு, ஒரு வருடத்திற்கு முழுத் தரவையும் பயன்படுத்தலாம். ஜியோவின் இந்த இரண்டு நீண்ட கால செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களின் விலை ரூ.2,878 மற்றும் ரூ.2,998 ஆகும்.

மேலும் படிக்க: மலிவு விலையில் நல்ல ஆண்ட்ராய்டு போன்

ரூ.2,878 திட்டம் விவரம்: 
ரூ.2,878 திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் 1 வருடத்திற்கு தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். 1 வருடத்தின் செல்லுபடியாகும் காலத்தின்படி, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மொத்தம் 730 ஜிபி டேட்டா அணுகலைப் பெறுவார். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் @64 Kbps ஆகக் குறைக்கப்படும். 

மேலும் படிக்க: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.7 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்..

ரூ.2,998 திட்டம் விவரம்:
2,998 திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் தினசரி 2 ஜிபி டேட்டாவுக்கு பதிலாக 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். 1 வருடத்தின்படி, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் மொத்தம் 912.5ஜி டேட்டா அணுகலைப் பெறுகிறார்கள். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் @64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

மேலும் படிக்க: வாட்ஸ்அப் மெசேஜை தவறுதலாக ஆர்க்கிவ் செய்துவிட்டீர்களா?

நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இவை இரண்டும் ஜியோவின் டேட்டா வவுச்சர்கள். இந்த திட்டங்களில், பயனர்கள் டேட்டா வசதியை மட்டுமே பெறுவார்கள். அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுக்கு, பயனர்கள் மற்றொரு அடிப்படை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் படிக்க: ரெடியா! பட்ஜெட் விலையில் விவோ 5G ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News