புதுடெல்லி: குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission For Protection of Child Rights) அளித்த புகாரின் பேரில், டிவிட்டர் மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
டெல்லி போலீஸ் சைபர் செல் ட்விட்டருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ட்விட்டர் (Twitter) அண்மைக் காலமாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
Delhi Police Cyber Cell files a case against Twitter for child pornographic content on their platform. The case has been registered on a complaint by NCPCR (National Commission For Protection of Child Rights).
— ANI (@ANI) June 29, 2021
இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதற்காக நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | Twitter India இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி ராஜினாமா; அடுத்தது என்ன
முன்னதாக ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த குறைதீர்ப்பு அதிகாரி (grievance officer) தர்மேந்திரா சதுர் தனது வேலையை ஒரே வாரத்தில், ராஜினாமா செய்துவிட்டார். இதனால், ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு சமூக ஊடக தளங்களுக்கு (Social Media) கடிவாளம் போடும் வகையில், கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் (New IT Rules) கடந்த மேம் மாதம் 26ம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வந்தன. புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
ALSO READ | Twitter கொள்கையை விட இந்திய சட்டங்கள் மேலானவை : நாடாளுமன்ற நிலைக்குழு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR