Best Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா?

இந்தியாவிலும், பல உள்நாட்டு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கின்றன, சில கார்கள் வெளிநாட்டிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 12:55 PM IST
  • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாருதி ஆல்டோ ஆகும்.
  • பெரும்பாலான VW Lavida (Volkswagen Lavida) கார்கள் சீனாவில் விற்கப்படுகின்றன.
  • ரஷ்யாவில் அதிகம் விற்பனையாகும் கார் லாடா கிராண்டா.
Best Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா? title=

Best Selling Cars: உலகம் முழுவதும் வாகனங்களுக்கான சந்தை மிகப்பெரியதாக உள்ளது. கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு பிடித்தமான கார்களை வாங்குகிறார்கள்.

இந்தியாவிலும், பல உள்நாட்டு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கின்றன, சில கார்கள் வெளிநாட்டிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில் அதிகம் விற்பனையாகும் கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்தியா
bestsellingcarsblog.com படி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் (Cars) மாருதி ஆல்டோ ஆகும். இதற்கு முக்கிய காரணம் இந்த காரின் விலை குறைவு என்பதே. இந்த காரின் விலை ரூ.3.15 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதனுடன், அதன் அம்சங்கள் மற்றும் சிறியதாக, கச்சிதமாக இருக்கும் அதன் வடிவமைப்பு அதை இன்னும் சிறப்பாக ஆக்குகிறது.

இலங்கை

இலங்கையில் அதிகம் விற்பனையாகும் கார்களின் அடிப்படையில் சுசுகி ஆல்டோ (Suzuki Alto) முதலிடத்திலும் உள்ளது. மாருதி ஒரு இந்திய வாகன உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்

 

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் மிகப்பெரிய டொயோட்டா கரோலா கார் விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா ஒரு ஜப்பானிய நிறுவனம் ஆகும். டொயோட்டா கரோலாவின் விலை ரூ.14.83 லட்சத்தில் தொடங்குகிறது.

ALSO READ:Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம் 

சீனா
பெரும்பாலான VW Lavida (Volkswagen Lavida) கார்கள் சீனாவில் விற்கப்படுகின்றன. இது ஜெர்மன் நிறுவனமான வோக்ஸ்வாகனால் தயாரிக்கப்படுகிறது. இது சீன துணை நிறுவனத்துடன் இணைந்து 2008 இல் தொடங்கப்பட்டது.

ரஷ்யா

ரஷ்யாவில் அதிகம் விற்பனையாகும் கார் லாடா கிராண்டா. இது ரஷ்ய வாகன உற்பத்தியாளர் AvtoVAZ ஆல் தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்கா
Ford F-150 அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகிறது. ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஒரு அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமாகும். ஃபோர்டின் பல வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக தேவை உள்ளது. இது தவிர, ஃபோர்டின் எஃப் சீரிஸ் கார்கள் கனடாவில் அதிகம் விற்பனையாகின்றன. அதே நேரத்தில், ஃபோர்டு ஃபீஸ்டா இங்கிலாந்தில் அதிக விற்பனையைக் கொண்டுள்ளது.

சவூதி அரேபியா
சவூதி அரேபியாவில் ஹூண்டாய் (Hyundai) எக்ஸ்சென்ட் கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்தியாவிலும் இந்த கார் மீது பலர் பைத்தியமாக உள்ளனர். இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட்டின் விலை ரூ.5.83 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

ALSO READ: Most Beautiful Car: இந்தியாவில் இதன் விலை, பிற விவரங்கள் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News