Wi-Fi Calling சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யும் Airtel!

ஏர்டெல் தனது ‘Wi-Fi Calling’ சேவையை மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 

Last Updated : Dec 23, 2019, 01:14 PM IST
Wi-Fi Calling சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யும் Airtel! title=

ஏர்டெல் தனது ‘Wi-Fi Calling’ சேவையை மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 

Voice over Wi-Fi (VoWi-Fi) சேவை இந்த மாத தொடக்கத்தில் டெல்லி-NCR வட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த சேவை விரைவில் மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடுகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. 

ஏர்டெல் தனது Wi-Fi அழைப்பு சேவையை ஆதரிக்க ஆறு புதிய கைபேசிகளை அனுமதிப்பட்ட பின்னர் இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது. Samsung S10, S10+, S10e, M20 மற்றும் OnePlus 6 மற்றும் OnePlus 6T ஆகியவற்றில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என்று முன்னாதக ஏர்டெல் அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை, ஏர்டெல் Wi-Fi காலிங் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள், சாம்சங், சியோமி மற்றும் ஒன்பிளஸ் தொலைபேசிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் Wi-Fi அழைப்பு மூலம் பயனர்கள் Wi-Fiநெட்வொர்க்கில் குரல் அழைப்புகளை செய்ய இயலும். இருப்பினும், இந்த சேவை தற்போது அதன் சொந்த எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல் மேலும் பிராட்பேண்ட் சேவைக்கு Wi-Fi அழைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தனது VoWi-Fi சேவையை சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஜியோ சேவையை தொடங்குவதை முறையாக அறிவிக்கவில்லை.

இப்போதைக்கு, இணக்கமான கைபேசிகளைக் கொண்ட ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிமுறைகளின் மூலம் Wi-Fi அழைப்பைத் தொடங்கலாம்.

படி 1: பயனர்கள் சாதன இயக்க மென்பொருளை சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்த வேண்டும்.

படி 2: உங்கள் கைபேசியில் அமைப்புகளைத் திறந்து Wi-Fi அழைப்பை இயக்கவும்.

படி 3: இதற்கு முன்னதாக உங்கள் கைபேசியில் VoLTE இயக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்க.

ஏர்டெல்லின் Wi-Fi அழைப்பு சேவை இலவசமாகக் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்க. ஏர்டெல்லின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவின் படி, 5 நிமிட Wi-Fi அழைப்பிற்கு 5MB-க்கும் குறைவான தரவு செலவாகும் என கூறப்படுகிறது. உள்ளூர் மற்றும் STD அழைப்புகளை செய்ய பயனர்கள் Wi-Fi அழைப்பு சேவையைப் பயன்படுத்தலாம். என்றபோதிலும் இந்த சேவையை சர்வதேச அழைப்பு அல்லது ரோமிங் அழைப்புக்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஏர்டெல்லின் Wi-Fi அழைப்பு சேவைகளைப் பயன்படுத்தி வேறு எந்த நெட்வொர்க்குக்கும் அல்லது Wi-Fi அழைப்பு சேவைகள் இல்லாத எண்ணுக்கும் அழைப்புகள் சாத்தியமாகும், மேலும் அழைப்பின் காலத்திற்கு பிற நெட்வொர்க்குகளுக்கு பொருந்தக்கூடிய தற்போதைய விலைகள் / திட்டங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்" எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Trending News