அண்ணன் மாதிரி நினைத்து பழகினேன்போன் செய்து அநாகரிகமாக நடந்து கொள்கிறார்; போன் மேல் போன் செய்து ஆபாசமாக பேசுவதோடு தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி எனும் பெண் பரபரப்பு புகார். போன் எடுக்கலைன்னா வீட்டுக்கு வந்து விடுவேன், இல்லைனா கார் அனுப்புறேன் நீ வா என்கிறார், ஓ பி ரவீந்திரநாத்தின் அநாகரிக செயல்கள் குறித்து ஓபிஎஸ்டமும் கூறியுள்ளேன் என்று காயத்ரி தேவி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத்தால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி பெண் ஒருவர் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் மனுவை அளிக்க டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்தார்,
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் 5 ரூபாய் வாங்கப்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தனது பெயர் சிவகங்கை காயத்ரி தேவி என அறிமுகப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குடும்பத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக பழகி வருகிறோம், ஒ பி ரவீந்திரநாத்தை எனக்கு உடன்பிறவா சகோதரனாக எண்ணி நட்பாக பழகி வந்தோம். ஓ பி ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி என்னுடைய தோழி அவரின் மூலமாக தான் ஓ பி ரவீந்திரநாத் குடும்பத்தோடு நட்பு ஏற்பட்டது. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ( இயக்குனர் பாலாவின் மனைவி) ஓ பி ரவீந்திரநாத்துக்கு தகாத உறவு இருந்தது, இயக்குனர் பாலாவனுடன் மலருக்கு விவாகரத்தும் ஆன நிலையில் எங்கள் நட்பு வட்டாரத்தில் பலருக்கும் இது மனக்கசப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனக்கு விவாகரத்தானது, இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பாக ஓபி ரவீந்திரநாத்தின் நண்பர் என கூறிக் கொண்டு ஒரு நபர் என்னை தொடர்பு கொண்டு ஒ பி ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும் அவருடன் பேசுங்கள் என்றும் கூறினார், அதுவும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து இந்த அழைப்பு வந்தது அதிர்ச்சி அளித்தது. இந்த விவகாரத்தை ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடமும் கூறியிருந்தேன். இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி மீண்டும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அரை மணி நேரம் நன்றாக பேசிய ஓ பி ரவீந்திரநாத் ஒரு கட்டத்திற்கு மேல் ஆபாசமாக பேசத் தொடங்கினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த நான் நீங்கள் பேசுவது நல்லா இருக்கிறதா நான் உங்களை அண்ணனாக பார்க்கிறேன் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு சும்மா இப்படி எல்லாம் சொல்லாதே மலர் மாதிரி உன்னையும் நன்றாக வைத்து ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன் , வேண்டுமானால் கல்யாணம் கூட செய்து கொள்கிறேன் என்றெல்லாம் கூறினார். ஆண்கள் குடித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறதா குடித்தால் தாய்க்கும் தங்கைக்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதா. இதே போல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஒரு எம்பி வீட்டின் பெண்ணிடம் பேச முடியுமா அப்படி பேசினால் சும்மா விடுவார்களா.? இவ்வாறு பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பினேன், அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆனால் அவர் நண்பர்கள் இடத்தில் இருந்து மிரட்டல்கள் மட்டும் தொடர்ந்து வருகிறது.
இன்று எனக்கு நடப்பது நாளை என் மகளுக்கு நடக்கலாம், இதனால் இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் பயப்படுவதாக இல்லை இதை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளேன். கடந்த நவம்பர் மாதத்திலேயே இதுகுறித்து ஓபிஎஸ் இடமும் கூறினேன். இது குறித்து ஏற்கனவே கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க வந்தேன், ஆனால் இன்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க முடியவில்லை, நாளை காலை 10 மணிக்கு வருமாறு கூறியிருக்கிறார்கள். இதற்கு நடுவில் எந்த மிரட்டல் வந்தாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதுமில்லை என்றார். மேலும் ஓபிஎஸ் - டம் இது குறித்து பேசியபோது ஒ பி ரவீந்திரநாத் தனது அம்மாவின் திதிக்கு கூட வரவில்லை இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவரிடம் நான் என்ன சொல்வது என்று கூறினார். அதோடு இது தொடர்பான வாட்சப் சாட்டுகள் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததற்கான ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்கள் முன்பு காண்பித்தார்.
மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ