தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சிறைதண்டனை அளித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று வைகோ மனு செய்தார். இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரததால் அவர் கடந்த 50 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார்.
ஆனால், தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வைகோ தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.