விலையில்லா இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தல்...

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு விலையில்லா வேட்டி சேலை வந்துவிட்டதா என்பதை அந்தந்த தாலுக்கா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2019, 01:42 PM IST
விலையில்லா இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தல்... title=

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு விலையில்லா வேட்டி சேலை வந்துவிட்டதா என்பதை அந்தந்த தாலுக்கா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு... 

தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ் மக்களுக்கு தமிழக முதலவர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில், நேற்று அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து இன்று, தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி - சேலை கிடைப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விலையில்லா வேட்டி சேலையை வழங்கும் போது நியாய விலைக்கடைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில்லாமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் போதுமான அளவு விலையில்லா வேட்டி சேலை வந்துவிட்டதா என்பதை அந்தந்த தாலுக்கா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி சேலைகளின் மீது பொங்கல்-2019 என்ற சீல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு பறக்கும் படை அமைக்கப்பட்டு விலையில்லா வேட்டி - சேலை வழங்கும் போது ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி - சேலை வழங்குவதில் எந்த ஒரு குளறுபடியுமின்றி வரும் 31 ஆம் தேதிக்குள்ளாக அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கி முடித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Trending News