பரந்தூரில் கடந்த 900 நாட்களுக்கும் மேலாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள விமான நிலையம் வேண்டாம் என்று இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் விவசாய நிலங்கள் மற்றும் சில கிராமங்கள் அழியும் என்பதால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து காவலர்களை இந்த பகுதி முழுக்க ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த பகுதி மக்களை நேரடியாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் உண்மையில்லை - சங்ககிரி ராஜ்குமார்!
விஜய் ஆதரவு
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆரம்பத்தில் அனுமதி மறுத்த தமிழக காவல்துறை பின்பு சிலர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் மக்களை சந்திக்க வேண்டும், குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பேச வேண்டும், வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது, குறிப்பிட்ட வாகனத்தில் மட்டும்தான் வர வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தங்களை ஏற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மக்களை சந்தித்து பேசினார். அப்போது ஆளும் அரசை மிக கடுமையாக எதிர்த்து பேசி இருந்தார்.
#JustIn | சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம்#Tvk | #Vijay | #TVKVijay | #Parandur | #ParandurAirport | #ZeeTamilNews pic.twitter.com/OJqkAIlVbC
— Zee Tamil News (@ZeeTamilNews) January 20, 2025
பரந்தூரில் விஜய்யின் பேச்சு
நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்களை போன்ற விவசாயிகள் தான். உங்களை மாதிரியான விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுதான், என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என ஒரு முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என்று எனக்கு தோணுச்சு.
என்னை உங்கள் வீட்டில் இருக்கிற மகனாக... என் கள அரசியல் பயணம், உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன். டங்ஸ்டனுக்கு எதிரான நிலைப்பாட்டை பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் எடுத்திருக்க வேண்டும்; அரிட்டாப்பட்டி மக்கள் போலதான் பரந்தூர் மக்களையும் பார்க்க வேண்டும்.
விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது; விவசாய நிலங்களை அழிப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.
910 நாட்களுக்கு மேல் உங்க மண்ணுக்காக போராடுறீங்க. உங்க போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசியதை நான் கேட்டன். அந்த குழந்தை பேச்சு மனச ஏதோ செஞ்சிடிச்சு உடனே உங்க எல்லாரையும் பார்க்கணும்னு தோணுச்சு. உங்க எல்லாரு கூடவும் பேசணும்னு தோணுச்சு.
விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை. ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி, எதிர்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும்கட்சியான பின் விவசாயிகளுக்கு எதிர்ப்பா?
பரந்தூர் விமான நிலையத்திற்கு, விவசாய நிலம் இல்லாத வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மீண்டும் உங்க ஊருக்குள்ள நான் வரேன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ