8th Pay Commission Latest News: சமீபத்தில், 8வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே மகிழ்ச்சி அலையை உருவாக்கி உள்ளது. இப்போது இந்த 8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்? எந்த மாநிலத்தில் முதலில் அமல் செய்யப்படும்? என்ற கேள்விகள் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுகிறது. இதனுடன், 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்ட பிறகு, எந்த மாநிலத்தின் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது. 8வது ஊதியக் குழு குறித்து அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுவோம்.
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முதலில் மத்திய ஊழியர்களுக்குப் பொருந்தும். இதற்குப் பிறகு, மாநிலங்களும் அவற்றைச் செயல்படுத்த வேண்டும். 7வது ஊதியக் குழுவின் போது, பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டன. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்தின் விதிமுறை மற்றும் கால வரம்பு வேறுபட்டது.
எளிமையாக செல்லவேண்டும் என்றால், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழுவைச் செயல்படுத்தும் நேரத்திலிருந்தே, 8வது ஊதியக் குழுவை மாநில ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மாநிலங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.
இந்திய ஊதியக்குழு ஆணையம்
அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தை மறுசீரமைக்க இந்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு ஊதியக் குழுவை அமைக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ஆணையம் பரிந்துரைகளை வழங்குகிறது.
பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன?
மத்திய அரசு சம்பளக் குழுவின் புதிய பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, மாநிலங்கள் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிடுகிறது. இதற்குப் பிறகு, ஒவ்வொரு மாநிலமும் அதன் பட்ஜெட் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்குகிறது. மாநிலங்கள் தங்கள் தேவைகள் மற்றும் நிதி நிலைமையை மனதில் கொண்டு வெவ்வேறு ஊதிய மேட்ரிக்ஸை உருவாக்குகின்றன. இருப்பினும், தற்போதுள்ள சம்பளத்தை புதிய ஊதிய அளவுகோலாக மாற்ற ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் அதையே செய்கிறது.
ஃபிட்மென்ட் காரணி உயருமா?
உதாரணமாக, தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக உள்ளது. ஆனால் அது 2.86 ஆக அதிகரிக்கப்பட்டால், உங்கள் தற்போதைய அடிப்படை சம்பளம் 2.86 ஆல் பெருக்கப்படும். இதன் காரணமாக உங்கள் உங்கள் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். அதேநேரம் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்படுகிறது.
கடைசியாக அமல் செய்யப்பட்ட 7வது சம்பளக் குழுவைப் பற்றிப் பார்த்தால், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சராசரியாக 20-25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
எந்த மாநிலங்களில் சம்பளம் முதலில் அதிகரிக்கும்?
மத்திய ஊழியர்களுக்கு 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், மத்திய அரசு மாநிலங்களுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிடும். இதுபோன்ற சூழ்நிலையில், அதை தங்கள் மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது மாநில அரசுகளைப் பொறுத்தது. இருப்பினும், முந்தைய சம்பளக் குழுக்களை செயல்படுத்தப்படத்தை பார்த்தால், இந்த பரிந்துரைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சி மற்றும் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலங்களில் விரைவாக செயல்படுத்தப்பட்டன என்பது தரவுகள் காட்டுகிறது.
7வது சம்பளக் குழு முதலில் எந்த மாநிலத்தில் அமல் செய்யப்பட்டது?
உதாரணமாக, 7வது சம்பளக் குழுவின் போது, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முதலில் அதை அமல்படுத்தின. மறுபுறம், 8வது சம்பளக் குழுவைப் பற்றிப் பேசினால், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் ஊழியர்கள் இதில் அதிகப் பலனைப் பெறலாம். ஏனெனில் இந்த மாநிலங்களின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது மற்றும் ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளது.
மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்குமா?
அதிகபட்ச சம்பள உயர்வைப் பொறுத்தவரை, மத்திய அரசின் ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில், மாநில அரசும், அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும். அதன் காரணமாக அந்தந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ