அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் டிரம்ப்(78) இன்று(ஜன.20) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப் கமால் ஹாரிசை வீழ்த்தி வெற்றிபெற்றார். இதன் மூலம் தனது இரண்டாவது பதவிக் காலத்தை தொடங்குகிறார் டிரம்ப். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்கிறார்.
பதவியேற்பு நிகழ்ச்சியின் ஏற்பாடுகள்
டோனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளதால் பதவியேற்பின் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், துணை அதிபரின் பதவியேற்பு, அதிபரின் தொடக்க உரை, முந்தைய அதிபரின் புறப்பாடு, மதிய உணவு ஆகியவை இடம் பெறும். அதிபரின் டிரம்ப்பின் தொடக்க உரையில் அடுத்த 4 ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெறும்.
இவ்விழாவிற்கு நியூயார்க்கின் பேராயர் கார்தினல் டிமோதி டோலன் தலைமை வகிக்கிறார். பார்வையாளர்களை உற்சாகமூட்டும் விதமாக இசை நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு டோனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது, பிரபல இசைக் கலைஞரான அண்ட்ர்வுட் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த முறையும் அவரே இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேலானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
மேலும் படிங்க: டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்த நீரஜ் சோப்ரா! யார் அந்த ஹிமானி?
டிரம்ப்பின் முதல் கையெப்பம்
அதிபராகப் பதவியேற்ற உடனேயே டோனால்ட் டிரம்ப் குடியேற்றம், எல்லைப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் நிர்வாகம் தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாக உத்தரவுகளில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரக்கால நிலையை அறிவித்தல், எல்லைகளில் இராணுவப் பணியமர்த்தலுக்குத் தயாராகுதல், மெக்ஸிகோவில் இருங்கள் என்ற கொள்கையை மீண்டும் நிலைநிறுத்தல் மற்றும் எரிசக்தி தொடர்பான அவசரநிலையை அறிவித்தல் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதவியில் இருந்து விலகும் ஜோ பைடனின் சில நிர்வாக உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகளை டோனால்ட் டிரம்ப் திரும்பப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: பிக்பாஸ் 8: வின்னர் முத்துவுக்கு 40 லட்சம்! ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை லட்சம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ