TN Weather Update: ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 6, 2021, 08:03 AM IST
  • சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
  • வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரத்தில் கனமழை
  • வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இன்று கனமழை
TN Weather Update: ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை title=

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி  விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு (Heavy Rainfall) வாய்ப்பு இருப்பதாக கூறபட்டு உள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையை (Chennai Rain Update) பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்று கூறபட்டு உள்ளது.

இதற்கிடையில் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கடுத்து ஓடி வருகிறது.

 

 

ALSO READ | Summer Diet Tips: கோடையை குதூகலமாக்க குளு குளு டிப்ஸ் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News