TN Govt Important Annoucement For Rationcard Holders: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை களை கட்டிய நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்ப்பு தொடர்பான செய்தி வெளியாகி, மக்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த நிலையில், யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும். அத்துடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது.
வேட்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய்
இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துவிட்டதாக தெரிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு, பொங்கல் வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் பணம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக உரிய நர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் ரொக்க பணம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகம் செய்வதற்கான டோக்கன், தமிழகம் முழுவதும், ஜனவரி 7ம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்கள் தரமான முறையில் இருக்கும்.
பொங்கல் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற வேண்டும் என்று முதல்வர், மூத்த அமைச்சர்கள் தலைமை செயலாளர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி அதற்குப் பிறகு தான் ரொக்க பணம் 1000 ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
மேலும் படிக்க | பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ