வீடுகட்ட இடையூறு... நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் முன்பு தீ குளிக்க முயற்சி!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் தீடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Last Updated : Apr 4, 2022, 04:16 PM IST
  • வீடு கட்ட இடையூறு அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பெண்.
  • நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தீ குளிக்க முயற்சி.
வீடுகட்ட இடையூறு... நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் முன்பு தீ குளிக்க முயற்சி!  title=

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தக்குமாரி. 

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு கல்லல் காவலர் குடியிருப்பு அருகே 10 சென்ட் இடத்தை வசந்த குமாரி வாங்கியுள்ளார். 

இத்தனை ஆண்டுகளாக இரண்டு மகன்களையும் வளரக்கவே கஷ்டப்பட்டு வந்தார் வசந்தகுமாரி.

இந்நிலையில் இதுவரை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த தனது சேமிப்பை வைத்து தற்போது வீடுகட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் படிக்க | டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் வாழ்த்துப்பாடல்!

இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது வீடுகட்டத்தொடங்கியதும், அந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி அதே ஊரை சேர்ந்த 3 தனி நபர்கள் பிரச்சனை செய்து வருவதாக தெரிகிறது.

இது தொடர்பான விசாரணை ஆர்டிஓ கோர்ட்டில் நடைபெற்று வசந்தகுமாரிக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது. 

இதை அறிந்தும் அந்த தனிநபர்கள் வீடு கட்டும்போது பிரச்சனை செய்து பணிகளை கெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் குறைதீர்க்கும் முகாமில் வசந்தகுமாரி பலமுறை மனு அளித்துள்ளார்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வசந்த குமாரி இன்று நடந்த குறைகேட்பு முகாமிற்கு சென்று தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்‌. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News