Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 23 சதவீதம் தடுப்பூசிகள் ஏப்ரல் 11 வரை வீணாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 01:42 PM IST
  • தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வீணாக்கப்பட்டன தடுப்பூசிகள்.
  • RTI மூலம் வெளிவந்தன அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.
  • ஏப்ரல் 11 வரை மொத்தம் 44.78 லட்சம் டோஸ்கள் வீணாகிவிட்டன என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம் title=

புதுடில்லி: இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 23 சதவீதம் தடுப்பூசிகள் ஏப்ரல் 11 வரை வீணாக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் அளவிலான தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக வந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகியவை அடங்கும். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

RTI மூலம் கோரப்பட்ட தகவலில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 10.34 கோடி தடுப்பூசிகளில், ஏப்ரல் 11 வரை மொத்தம் 44.78 லட்சம் டோஸ்கள் வீணாகிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, மத்திய அரசிடம் அதிக அளவில் தடுப்பூசிகளை தருமாறு மாநிலங்கள் கோரி வரும் நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ: Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இதற்கிடையில், கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோராம், கோவா, தமன் மற்றும் தியூ, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதுவும் வீணடிக்கப்படாமல், முழுவதுமாக பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. 

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், ​​மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை துரித வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. 

சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெமெடிவிர் விநியோகத்தை மத்திய அரசாங்கம் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த மாநிலங்களின் வென்டிலேட்டர் இருப்புகள் அதிகரித்துள்ளதோடு தடுப்பூசி அளவுகளும் மேம்பட்டுள்ளன. 

இதற்கிடையில், திங்களன்று தடுப்பூசி (Vaccination) செயல்முறையை விரிவுபடுத்திய மத்திய அரசு, மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தது. முந்தைய கட்டங்களைப் போலல்லாமல், விலை நிர்ணயம், கொள்முதல், தகுதி மற்றும் நிர்வாகத்தை இன்னும் வசதிகாயகவும் எளிதாகவும் ஆக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு பெரும் உதவி கிடைக்கும்.

ALSO READ: பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News