சாதி அடிப்படையில் மனிதர்களை வேற்றுமைப்படுத்தும் சனாதனத்தை கட்டாயம் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அவரின் இந்த பேச்சை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், உதயநிதி ஸ்டாலினுடன் அந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாவும் கலந்து கொண்டதற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக கூறி, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
இது தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மத்தில் கிடையாது என்று கூறினார். " விதவைகள் உடன் கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மம் கொண்டு வரவில்லை. அந்நிய படையெடுப்பு வந்த பிறகு அந்த படையெடுப்பில் ஒரு ராஜாவோ வீரனோ கொல்லப்பட்டால் அவருடைய மனைவியும், தங்கையையும் அம்மாக்களையும் பரிசு பொருளாக அந்நியர்கள் எடுத்து சென்றார்கள். இதில் இருந்து தப்பிக்கவும், பெண்களை கற்பை காக்கும் விதமாகவே கணவர் இறக்கும்போது அந்த பெண்ணும் உடன்கட்டை ஏற ஆரம்பித்தார்கள்" என்று விளக்கினார்.
இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் சதிக்கும், உடன் கட்டை ஏறுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக அண்ணாமலை விளக்கம் கொடுத்திருப்பதாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், " சதி எனப்படும் கொலை பாதக செயலுக்கும், ஜெளஹர் எனப்படும் ராஜபுத்திர பெண்கள் செய்த mass suicide-க்கும் வித்தியாசம் தெரியாத அரைவேக்காட்டு விளக்கம். எப்படியெல்லாம் கம்பி கட்றாங்க பாருங்க" கூறி, அதற்கான சான்று விளக்கங்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ