சமத்துவத்திற்கு குரல் கொடுப்போம் - சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணை வெளியீடு

சமத்துவநாள் உறுதிமொழி அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 14, 2022, 08:14 AM IST
  • சமத்துவ நாள் உறுதிமொழி
  • உறுதிமொழி அரசாணையாக வெளியீடு
  • அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்
சமத்துவத்திற்கு குரல் கொடுப்போம் - சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணை வெளியீடு title=

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சச்ர் மு.க. ஸ்டாலின்,“ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

நேற்றைய கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். 

Stalin

இந்த இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு வருகிறது.

மேலும் படிக்க | தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக செய்த மாணவர் - குவியும் பாராட்டு

இந்நிலையில், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில், “சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,

Ambedkar

சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரெட் ஜெயண்ட்ஸின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் - ஜெயக்குமார் விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News