ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 131 பேர் வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. 

Last Updated : Dec 5, 2017, 09:11 AM IST
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 131 பேர் வேட்புமனு தாக்கல் title=

ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27ம் தேதி தொடங்கியது. 

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டன.

கடைசி நாளில் நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன், எம்ஜிஆர் அண்ணன் மகன் உட்பட 101 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

கடைசி நாளான நேற்று மட்டும் 101 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம், 131 பேர் 145 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. இதை தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அன்று மாலையே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம்  ஒதுக்கீடு செய்யப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும்  சின்னம் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே சின்னத்தை கேட்டால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். பின்னர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணகை 24-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். 

ஆர்.கே.நகரில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது ஓட்டு எந்திரம் மூலம்தான் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஒரு பெட்டிக்கு 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்கலாம். மொத்தம் 63 வேட்பாளர் மற்றும் ஒரு நோட்டா என்று 64 பெயர்கள் இருந்தால் மட்டுமே எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடியும். அதற்கு மேல் இருந்தால், வாக்குச்சீட்டு முறைதான் பயன்படுத்த முடியும். 
இதனால் இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. மேலும் 7-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறப்படுகிறது. அதன்பின்னர் தான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதும் 64 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனால், மாலை 3 மணியளவில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தின் கதவு இழுத்து மூடப்பட்டது. டோக்கன் வாங்கியவர்களை தவிர மற்ற யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. 

Trending News