கொரோனா தடுப்பூசி பணியால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2021, 09:21 AM IST
கொரோனா தடுப்பூசி பணியால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு! title=

மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!

ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து (Polio Vaccine) முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி (Corona vaccine) போடும் பணி வரும் ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் (Ministry of Health) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா (Coronavirus) தடுப்பூசி போடும் பணி வரும் 16 ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்டமாக சுகாதாரத் துறை உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது. உலகை மிரட்டும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் முயன்ற போதிலும், குறிப்பிட்ட சில நாடுகளே அதில் வெற்றி பெற்றுள்ளன. அதிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட சில நாடுகளில் மட்டுமே தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘Covaxine’, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தயாரித்துள்ள ‘Covishield’ தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தலாம் என மத்திய அரசு கடந்த 3 ஆம் தேதி அனுமதி அளித்தது.

ALSO READ | Covaxin தடுப்பூசி போடுக்கொண்ட தன்னார்வலர் 10 நாட்களுக்கு பின் மரணம்!

இதை தொடர்ந்து, நாடு முழுவதும் இந்த தடுப்பூசிகளை போடுவதற்கான ஒத்திகைகள் நடத்தப்பட்டன.  தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமிப்பது, அவற்றை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கான போக்குவரத்து வசதி, தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி போன்றவை குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டன. 

இந்நிலையில், ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பொங்கல், வட மாநிலங்களில் டெல்லி, அரியானா, பஞ்சாப்பில் லோக்ரி, கர்நாடகாவில் மகர சங்கராந்தி, அசாமில் மா பிகு உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதனால், ஜனவரி 13 ஆம் தேதிக்கு பதிலாக, பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்படும் என மத்தியஅரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News