முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க | ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொள்ளை முயற்சிகள்! மர்மம் என்ன?
விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்டேட் குறித்த தகவல்களை அறிந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி சென்னை தியாகராயா நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன என்பது பற்றி சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கோடநாடு வழக்கு - 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR