PM Modi Tamil Nadu Visit: கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தலையொட்டி பிரமதர் மோடி பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு 2 மாதங்களில் மட்டும் சுமார் 7 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்துச் சென்றது தொடங்கி தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த பின்ன ஜூலை 1ஆம் தேதி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டவது வரை பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார். கோவை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பிரதமர் மோடி ரோட் ஷோவும் மேற்கொண்டார்.
4 மாதங்களுக்கு பின்
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற பின் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வருகை தராமல் இருந்தார். பதவியேற்ற பின்னர் தற்போது முதல்முறையாக அதுவும் 4 மாதங்களுக்கு பின் வரும் அக். 2ஆம் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
22 மாதங்களுக்கு பிறகு...
பாம்பன் பழைய ரயில் பாலத்தில் மையப் பகுதியில் அமைந்திருந்த ரயில் தூக்குப்பாலம் நூற்றாண்டைக் கடந்து உறுதித் தன்மை இழந்ததாக கூறப்பட்டது. எனவே, பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே கடலில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்ட இந்திய ரயில்வே திட்டமிட்டது. இதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றது.
மேலும் படிக்க | தீவிர ஆலோசனையில் விஜய்.. தள்ளிப்போகும் தவெக முதல் மாநாடு? காரணம் இதுதாங்க!
பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் சுமார் 500 டன் எடை கொண்ட செங்குத்து இரும்பு தூக்கு பாலம் அமைந்துள்ளது. பாம்பன் கடலில் கட்டப்பட்டு வந்த புதிய ரயில் பால பணிகள் நிறைவடைந்ததையொட்டி, அதனை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் அக். 2ஆம் தேதி அன்று தமிழ்நாட்டுக்கு வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.
மண்டபத்தையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் இந்த பாலத்தில் சுமார் 22 மாதங்களுக்கு பின் ரயில் சேவை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சுமார் 2.05 கி.மீ., தூரம் உள்ள இந்த புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ராமநாதபுரத்தில் பாம்பன் பாலத்தை மட்டுமின்றி சென்னை விமான நிலையத்தில் சில திட்டங்களையும், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சில திட்டங்களையும் பிரதமர் மோடி எதிர்வரும் சுற்றுப்பயணத்தின்போது திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க | கிசுகிசு : செம அப்செட்டில் தூங்காநகரத்து மூன்றெழுத்து இன்ஷியல் மாண்புமிகு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ