Stomach Health: சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத வேண்டும் என ஒரு கூற்று உள்ளது. அது உடல் ஆரோக்கியத்திற்கு கச்சிதமாய் பொருந்தும். நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் நமது வாழ்வை நிம்மதியாக, வெற்றிகரமாக வாழ முடியும். ஆனால், இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தாலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒரு சவாலாகவே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில், அஜீரணம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. எனினும், சில எளிய, இயற்கையான வழிகளில் இவற்றுக்கு நிவாரணம் காணலாம். காலையில் எழுந்தவுடனே சில எளிய பழக்கங்களை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
செரிமான மண்டலத்தை பலப்படுத்தவும் வயிற்று நோய்கள் வராமல் தடுக்கவும் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்
Warm Water: வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். இது உங்கள் உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொண்டால், குடலைச் சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்தையும் இது அதிகரிக்கும்.
Breathing Exercise: சில நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்
மூச்சை உள்ளிழுத்து ஆழமாக வெளியேற்றும் பழக்கம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். காலையில் எழுந்ததும், 5-10 நிமிடங்கள் கபால்பதி அல்லது அனுலோம்-விலோம் பிராணயாமம் செய்வது நல்லது. இது வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். இந்த பழக்கம் உங்கள் குடல்களை வலுப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
Stomach Massage: உங்கள் வயிற்றை மசாஜ் செய்யவும்
காலையில் எழுந்ததும் வயிற்றில் லேசாக மசாஜ் செய்யவும். இது உங்கள் குடல்களை செயல்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். வயிற்றைச் சுற்றி மென்மையான வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.
Fruits: பழங்கள், உலர் பழங்களை உட்கொள்ளவும்
ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்கள் அல்லது ஊறவைத்த பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்கும். பழங்களில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த பழக்கம் உங்கள் குடலை சுத்தம் செய்து உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். காலை வேளையை சரியாகத் தொடங்குவது உங்களை நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்தியோருக்கும். இந்த பழக்கங்கள் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி அடிக்கடி ஏற்படும் வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருப்பாக்கும் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, மருதாணி - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ