பெரியார் பற்றிய 5 முக்கிய தகவல்கள்

சமூகநீதி போராளி பெரியார் அவர்கள் தன் வாழ்நாளில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என போராடினார். அவர் அதற்காக முன்னெடுத்த போராட்டங்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 17, 2023, 03:13 PM IST
  • சமூகத்தில் சாதி பேதமை அறவே இருக்கக்கூடாது
  • அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் வேண்டும்
  • கோயில் கருவறை தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் - பெரியார்
பெரியார் பற்றிய 5 முக்கிய தகவல்கள் title=

கடவுள் மறுப்பு பற்றி பெரியார்

"என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர், அதில் உண்மையில்லை. நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான். சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை. ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய. மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்" என்பது பெரியாரின் பார்வை.

மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!

அர்ச்க்கர் போராட்டம்

கடவுள் இல்லை என்று வாழ்நாள் முழுவதும் பெரியார் தீர்க்கமாக பேசியிருந்தாலும் கோயில்களில் கருவறை தீண்டாமையை கடுமையாக விமர்சித்தார். ஒரு குறிபிட்ட சாதியினர் மட்டும் கடவுளை பூஜிப்பது ஏன்? அனைத்து சாதியினரும், ஆண் - பெண் இருபாலரும் கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இப்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்கள், கருவுற்ற பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்திருப்பதுடன், 3 பெண்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கியுள்ளது. 

கிறிஸ்துவம் - இஸ்லாம் பற்றி பெரியாரின் பார்வை

" எந்த மதத்தில் மூட நம்பிக்கைகள் இருந்தாலும் அவை ஒழிக்கப்பட வேண்டியவை. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களில் இருக்கும் மூட நம்பிக்கைகள் மீதும் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கின்றன. ஆனால் இந்து மதத்தில் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் சாதிகள் உருவாக்கப்பட்டு காலங்காலமாக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர். கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை, குறிப்பிட்ட சாதிகள் உயர் சாதியினர் தெருக்களில் கூட நடமாட முடியாத நிலை இருக்கிறது. 

பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் இந்து மதத்தில் நடக்கும் கொடுமைகள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர்களுக்கான உரிமைகள் பெற்றுத்தர போராட வேண்டியது அவசியம். குறிப்பிட்ட சாதியினர் மட்டும் எப்படி கோயில் கருவறை முதல் நீதிமன்றங்கள் வரை அனைத்து இடத்திலும் கோலோச்ச முடிகிறது. இதனை மாற்ற வேண்டும். எல்லா மக்களுக்கும் எல்லா உரிமையும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி, சம உரிமையை நிலைநாட்ட வேண்டும்" என பெரியார் தெரிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டம்

கடவுளின் தேசமான கேரளத்தில் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை போன்ற கொடுமைகள் நிலவிவந்தன. இப்படி அனுமதி மறுக்கப்பட்ட சில குறிப்பிட்ட தெருக்களில் நடக்க அனுமதிக்கக் கோரி நிகழ்ந்ததே வைக்கம்போராட்டம். வைக்கம் கோயில் அருகமைத் தெருக்களில் ஈழவரும் புலையரும் நடப்பதற்கான ‘சஞ்சார உரிமை’யைக் கோரி 1924-1925ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட போராட்டம் இது. இந்த போராட்டத்துக்கு பெரியார் தலைமை தாங்க, சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளுக்குப் பிறகே ஓரளவு வெற்றி கிடைத்தது. பின்னாளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கோயிலுக்குள் நுழைவதற்கு இப்போராட்டமே வித்திட்டது.

எழுத்து சீர்த்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார். தொடக்க காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியபோதும், பின்னாளில் அரசாங்கமே அதனை ஏற்றுக் கொண்டது. இப்போது பயன்படுத்தும் தமிழ் எழுத்திகளில் சிலவற்றை முறைப்படுத்தியதே பெரியார் தான். காலத்துக்கு ஏற்ப வரும் மாற்றங்களை மொழியில் புகுத்த வேண்டும். மொழிக்கு புனிதம் கற்பிக்கப்பட தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தார் பெரியார்.

மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தரமற்ற சைக்கிள் வழங்கியதாக புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News