இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவு இல்லை -கமல்ஹாசன்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Last Updated : Sep 22, 2019, 10:36 AM IST
இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவு இல்லை -கமல்ஹாசன்! title=

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எற அறிவிக்கப்பட்டுத்து. இதேபோல் தமிழகத்தில் விக்கிரவண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

தமிழகத்தில் திமுக கூட்டணியை பொறுத்தவரையில், விக்கிரவண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் விரைவில் முடிவு எடுக்கப்படும் எதிர்பார்க்கப்டுகிறது. 

இந்நிலையில் தற்போது இவ்விரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் போட்டியிடப்போவதில்லை என அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி அவர்கள், தங்கள் கட்சி சார்பிலும் யாரும் போட்டியிடபோவதில்லை என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்துக்கது.

Trending News