Marina Beach Memorials: மெரீனா கடற்கரையும், தலைவர்களின் நினைவிடங்களும்…

தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் மூவருக்குக் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முத்தமிழ் வித்தகர் கலைஞருக்கும்ம் மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்படுகிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2021, 02:48 PM IST
  • மெரீனா கடற்கரையில் முதல் நினைவிடம் அமைந்தது திமுக நிறுவகர் அறிஞர் அண்ணாவுக்கு
  • அதிமுக நிறுவகர் எம்.ஜி.ஆர் மற்றும் அக்கட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரீனாவில் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன
  • தற்போது திமுகத் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம் அமைகிறது
Marina Beach Memorials: மெரீனா கடற்கரையும், தலைவர்களின் நினைவிடங்களும்… title=

வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை மற்றும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. அளவுக்கு மெரினா பீச் பரந்து விரிந்துள்ளது.  

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். 

80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்த முதல்வர் மு.கருணாநிதி மட்டுமே. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கருணாநிதி.

Also Read | தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம் 

13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச்செய்தியாக இருந்தவர் கருணாநிதி. 

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் வித்தகர் கருணாநிதிக்கு அமையவிருக்கும் நினைவிடத்தில், அவருடைய வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற பெருமை பெற்ற சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி. ராமசந்திரன்,ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்கள் இங்கு அமைந்துள்ளன.

தற்போது கலைஞர் கருணாநிதிக்கும் மெரீனாவில் நினைவிடம் அமையவுள்ளது. இந்த நான்கு முதலமைச்சர்களுமே திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக பணியாற்றிய அறிஞர் அண்ணாவுக்கு தான் மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. திராவிட கட்சியின் பதவியை வகித்த முதல் உறுப்பினர் அறிஞர் அண்ணா தான்.  

அறிஞர் அண்ணாவை அடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களுக்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் என்று பிரபலமாக அறியப்பட்ட மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று மறைந்தார். 1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகளாக தமிழக முதலமைச்சராக பணியாற்றினார். "மக்கள் திலகம்" மறைந்ததும், மெரீனாவில் அன்னாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 06ம் தேதியன்று உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரீனா பீச்சில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மெரினா கடற்கரையில் நினைவிடங்களை அமைப்பது சரியில்லை என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்தபோது மறைந்த டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக வழக்குத் தொடந்தனர். 

Also Read | சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அப்போது அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பதை தனது தனிப்பட்ட கருத்தாக தெரிவித்தார்.  பிறகு ஜெயலலிதாவுக்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

2018ம் ஆண்டு ஆகஸ்டு ஏழாம் தேதியன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அப்போது, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது.

மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | கல்லூரிகள் திறப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News