திருப்பூரில் ஐ.பி.எல் ‘ஜெர்ஸி’ விற்பனை அமோகம்.!

ஐ.பி.எல் போட்டி தொடங்கியதை அடுத்து திருப்பூரில் ஐ.பி.எல் ஜெர்ஸி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 27, 2022, 04:42 PM IST
  • தொடங்கியது ஐ.பி.எல் ; ஜெர்ஸி விற்பனை மும்முரம்
  • திருப்பூரில் தயாரிக்கப்படும் ஐ.பி.எல் ஜெர்ஸிகளுக்கு வரவேற்பு
  • கொரோனாவுக்குப் பிறகு விற்பனை அதிகமாவதால் வியாபாரிகள் ஆறுதல்
திருப்பூரில் ஐ.பி.எல் ‘ஜெர்ஸி’ விற்பனை அமோகம்.! title=

கொரோனா தொற்றுக் காலத்தில் சிறுகுறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரி என தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்தவுடன் மெல்ல வியாபாரிகள் பொருளாதார ரீதியாக எழுந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் ஏற்றுமதி நகரான திருப்பூரில் இருந்து அதிகளவிலான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல், திருப்பூரில் உள்ள ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் காலத்துக்கேற்ப தங்களது பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது. கோடைக்காலம், குளிர்காலம், இலையுதிர்காலம் உள்ளிட்ட காலங்களுக்கு ஏற்ப பின்னலாடை உற்பத்தி செய்யப்படுகின்றன. 

மேலும் படிக்க | எம்எஸ் தோனியின் கேப்டன்சி சாதனைகள்!

தற்போது இந்தியாவில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணிகின்ற டி-சர்டுகள் மாடல்களில் திருப்பூரில் டி-சர்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் அதனை வாங்கி தங்களது மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் அணி, பெங்களூர் அணியான ஆர்.சி.பி, டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளின் டீ-ஷர்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஒரிஜினல் ஜெர்ஸியில் இடம்பெற்ற டிசைன்களோடும், பெயர்களோடும் உருவாக்கப்படும் திருப்பூர் டி-ஷர்ட்டுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கின. 

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

இதனால், கொரோனாவுக்குப் பிறகு ஆடை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் மட்டுமல்லாமல், உள்ளூர் சந்தைத் தெருக்களில் உள்ள கடைகளிலும் ஐ.பி.எல் ஜெர்ஸிகள் மும்முரமாக விற்பனையாகி வருகின்றன. வருகிற வாரங்களில் மேலும் டி-சர்டுகள் விற்பனை அதிகரிக்கும் என ஆடை தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட பாதிப்பின் காரணமாக ஐ.பி.எல். டி-சர்ட்டு விற்பனை சரிவை சந்தித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களும் உற்சாகமாக டி-சர்ட்டுகளை வாங்கி அணிந்து வருகின்றனர். மைதானத்தில் உள்ள ரசிகர்கள் தவிர, வீடுகளிலும் ரசிகர்கள் ஜெர்ஸி அணிந்தபடி ஐ.பி.எல் பார்ப்பதால் திருப்பூரில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News