150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

Last Updated : Nov 9, 2017, 10:51 AM IST
150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை  title=

ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினகரன், சசிகலா மற்றும் அவர்களின் உறவினா்கள், நண்பா்கள் என 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் காா்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Trending News