தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுக்குறித்து கூறுகையில், தமிழகத்தில் வட மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலடுக்கில் ஏற்பட்ட காற்றின் சங்கமத்தின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் கி பசார் பகுதியில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.