குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பட்டதாரி தூத்துக்குடி பெண்ணின் அவல நிலை

தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 25, 2023, 11:21 AM IST
  • இளம் பெண்ணின் பரிதாப நிலை
  • காதலித்து கைவிட்ட 3 காதலர்கள்
  • குழந்தைக்கு தந்தை யார்? என தெரியாத சோகம்
குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பட்டதாரி தூத்துக்குடி பெண்ணின் அவல நிலை title=

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடராம் அருகேயுள்ள கிராமத்தினை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கு கொரோனா காலத்தில் தனது செல்போனுக்கு வந்த ராங் கால் மூலமாக லாரி டிரைவர் இசக்கி முத்து என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பேச தொடங்கியுள்ளனர். சிறிது காலத்தில் பட்டதாரி பெண், லாரி டிரைவர் இசக்கிமுத்து இடையே காதலாக மாறியுள்ளது. நெருங்கி பழகும் அளவிற்கு பழக்கம் நீடித்துள்ளது. பின்னர் பட்டதாரி பெண் - லாரி டிரைவர் இசக்கிமுத்து இடையே கசப்பு ஏற்பட இருவரும் பிரிந்துள்ளனர். இதையெடுத்து அந்த பட்டதாரி பெண்ணிற்கு ஆறுதல் கூறுவதாக இசக்கிமுத்து நண்பர் ஒருவர் வந்துள்ளார். 

அவருக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் இடையே காதல் ஏற்பட்ட நெருக்கி பழகிய பிறகு அந்த நபரும் ஏமாற்றி சென்றதாக தெரிகிறது. இதையெடுத்து பட்டதாரி பெண் 3வது ஒரு நபருடன் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் லாரி டிரைவர் இசக்கிமுத்து, அவரது நண்பரும் மீண்டும் பட்டதாரி பெண்ணுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இந்நிலையில் பட்டதாரி பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த பட்டதாரி பெண்ணுடன் நெருங்கி பழகிய 3 பேரும் கைவிட்டு சென்றுள்ளனர். அந்த பட்டதாரி பெண்ணுக்கு வீட்டில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு குழந்தை பிறந்தது குறித்து அந்த பட்டதாரி பெண் தனது காதலர்களுக்கு செல்பேன் மூலமாக தெரிவித்தாகவும், 3 பேரும் அந்த குழந்தை தங்களுக்கு பிறக்கவில்லை என்று மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை மூட திட்டம்?

தனால் அதிர்;ச்சியடைந்த அந்த பட்டதாரி தனது தந்தையுடன், பச்சிளம் குழந்தையுடன் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்து மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் பச்சிளம் குழந்தைக்கு சட்டை கூட இல்லமால் பரிதாபமாக பட்டதாரி பெண் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னார், நடந்தவற்றை விசாரித்துள்ளார். மேலும் மனிதாபிமனத்துடன்  அந்த குழந்தைக்கு புதிய சட்டை வாங்கி கொடுத்த மட்டுமின்றி தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.  மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், அந்த குழந்தைக்கு புதிய சட்டை அணிவித்து பவுடர் போட்டு, போட்டு வைத்து அலங்கரித்தது மட்டுமின்றி, குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து, தாலாட்டி கவனித்து கொண்டனர்.

பசியோடு இருந்த பட்டாதரி பெண், அவரது தந்தைக்கு உணவு வாங்கி கொடுத்து பசியாற்றியுள்ளனர். பட்டாதரி பெண்ணுக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து தெரிந்ததும் அவரது தாய் மனமுடைந்து உயிரிழந்து விட்டதாகவும், அந்த பட்டதாரி பெண்ணின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் வேலைக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் தெரிகிறது. பட்டதாரி பெண்ணாலும் வேலைக்கு செல்லமுடியாத நிலை என்பதால் சாப்பிட கூட வழி இல்லமால், குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத நிலையில், ஒட்டு துணி கூட வாங்க முடியமால் பரிதவித்து வருகிறார். எனவே தனது குழந்தையின் தந்தையை கண்டுபிடித்து தரும்படி கடம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து லாரி டிரைவர் இசக்கிமுத்துவினை கடம்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் காரணம் இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் 2,3வது காதலர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் 3வது காதலன் கஞ்சா வழக்கில் சிக்கி சேலம் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. 2, 3வது காதலர்களை விசாரணை நடத்தினால் மட்டும் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய போலீசார், பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி பெண்ணின் குழந்தையின் பராமரிப்பு செலவிற்காக 2000 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். மேலும் தேவையான ஆடைகளையும் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | திமுகவை அச்சுறுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் கனவிலும் எடுபடாது - கனிமொழி ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News