இன்று முதல் வேளாங்கண்ணி திருவிழா ஆரம்பம்!

Last Updated : Aug 29, 2017, 11:57 AM IST
இன்று முதல் வேளாங்கண்ணி திருவிழா ஆரம்பம்! title=

அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வெற்றி திருவிழா அன்னை வேளாங்கண்ணியின் திருவிழா ஆகும். இன்று முதல் புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா கொண்டாட்டம். ஆரம்பத்தின் முதற்படியாக இன்று மாலை 6 மணிக்கு கொடி ஏற்றி திருவிழா தொடங்கிறது.

இந்நாளில் முதல் பல்வேறு விதமான  பிரார்த்தனைகளும் மற்றும் தேவ ஆராதனைகளும், வழிபாடுகள், தேர் பவானி, சிறப்பு பூசைகள், பாவ சங்கிர்தனம், தேவாலயத்தில் நடைபெறும்.

வேளாங்கணி ஆலய திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைப்பெறும்.  இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 6.30 மணி தொடங்குகிறது.

முக்கியமாக 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாள் கொண்டத்துடன் காலை 6.30 மணிக்கு தேர்பாவனி உலா வந்து அன்னையின் திரு கொடியை  இறக்கி விடப்படும்.

 திருவிழாவை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில பயணிகள் வேளாங்கணிக்கு வந்து உள்ள நிலையில்  பக்தர்களுக்கு குடிநீர், தங்குமிடம், கழிப்பறை ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பேரவை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். 

Trending News