எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 4, 2023, 11:27 AM IST
  • பாஜக அதிமுக கூட்டணி முறிவு.
  • தேர்தலை தனியாக சந்திப்பதாக அதிமுக முடிவு.
  • பாஜக தரப்பில் மவுனம் கடைபிடிக்கப்படுகிறது.
எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்! title=

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும் படிக்க | Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!

நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்க வில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கபட்டது என தெரிவித்தார். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களான  பொள்ளாச்சி ஜெயராமன், அமல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சினைகளுக்காக நிதியமைச்சரை சந்தித்தனர் என கூறிய அவர் இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றார். கோவையில் SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றார். 

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை எனவும் , கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம், காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை என கூறினார். மேலும் கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்ததாகவும், அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.  கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் என கூறிய அவர், நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என கூறிய அவர் மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் என தெரிவித்தார். அவரிடம் அதிமுக கூட்டணி குறித்து விபி துரைசாமி பேசுயது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் எல்லாம் முடிஞ்சு போச்சு என பதிலளித்தவாறு சென்றார்.

முன்னதாக சேலம் மாநகரில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   அதிமுகவை பொருத்தவரையில் தமிழக மக்களுக்காக தமிழக மக்களின் உரிமைக்காக போராடி வருகிறது என்றும் தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக என்றும் போராடும் என்றும் தெரிவித்தார், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களை உணர்வை ஏற்று பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக  ஒரு மன தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News