அப்துல் கலாம் பிறந்த நாள் - மோடி வாழ்த்து!!

Last Updated : Oct 15, 2016, 10:14 AM IST
அப்துல் கலாம் பிறந்த நாள் - மோடி வாழ்த்து!! title=

1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Trending News