கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சி விளையாட்டு திடலுக்கு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனையொட்டி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முத்தமிழிறிஞர் கலைஞர் கருணாநிதியின் விளையாட்டு திடல் என பெயர்சூட்டிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. வாழை மர தோரணங்கள் எல்லாம் வைத்து சிறப்பு அலங்காரத்துடன் ஓசூர் மாநகராட்சி விளையாட்டு திடல் ஜொலித்தது. ஆனால், இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு விளையாட்டு மைதானத்துக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!
மாநகராட்சி விளையாட்டு திடல் வாயில் முன்பு திரண்ட பாஜகவினர் கலைஞர் கருணாநிதியின் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். திடீரென சிலர் விளையாட்டு திடல் பெயர் பலகையில் இருந்த கருணாநிதி பெயரை கருப்பு மை பூசி அழித்தனர். இதற்கு காவல்துறை தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த திமுகவினரும் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி அழித்த பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திமுக மேயர் சத்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரச்சனை பெரிதாக வெடித்ததைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த கருப்பு மை பூசிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை உறுதி செய்த திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், பாஜகவினர் ஓசூர் மாநகராட்சி விளையாட்டு திடலில் கருணாநிதியின் பெயருக்கு கருப்பு மை பூசும் வீடியோ சமூகவலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் திமுகவினர் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.
— (@mylaivelu71) June 4, 2023
குறிப்பாக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு இந்த செயலுக்கு தன்னுடைய கண்டனத்தை ஆவேசமாக டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் பதிவில், "கழுதைகள் எல்லாம் புலி வேஷம் போட்டு ஆடுது பாத்துட்டு இருக்கீங்க. கோவனத்தோட ஓடவிடுங்கைய... சும்மா இவனுங்க வீடியோ எடுத்து செய்தியாக்க மட்டும்தான். மற்றபடி தொடை நடுங்கிகள்.சிங்கத்திடம் வந்து பூச்சாண்டி வேலையை காண்பிக்கிறார்கள்.கட்டுப்பாடு என்ற வரிக்கும் ஒரு எல்லை உண்டு" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ