சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அதிகாலை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், அதிகாலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திரையுலகில் வெற்றிகரமான நடிகராக இருந்தபோதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். அவருடைய அரசியல் பிரவேசமும் அட்டகாசமாக இருந்தது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜயகாந்தும் இடம்பிடித்தார்.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே கணிசமான வாக்குகள் வாங்கி அசத்தியவர் விஜயகாந்த்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் கட்சியை நிர்வகித்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய போது, கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார் விஜயகாந்த்.
Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி
கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்தால் முழு மூச்சாக பிரசாரம் செய்ய முடியவில்லை. ஆனால் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். ஆனால் அவரால் அதிகம் பேச முடியவில்லை என்பதால், பொதுமக்களிடம் கையசைத்து வாக்கு கேட்டார்.
அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. கடந்த ஒரு மாதமாக அரசியல் நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளை மட்டும் விஜயகாந்த் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்குவதாக விஜயகாந்த் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் விஜயகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Also Read | தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR