திருவொற்றியூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்-ரசாயன கழிவு காரணமா?

ஆமைகளின் இறப்பிற்கு பின்னால், இயற்கைக்கு முரணான கழிவுகள் ஏதேனும் கலந்ததால் இறந்திருக்கலாம் என சந்தேகம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2024, 06:27 PM IST
  • திருவொற்றியூர் கடற்கரையில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
  • ரசாயன கழிவுகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
  • ஆமைகள் 80 முதல் 150 வயது வரை உயிர் வாழுமாம்
திருவொற்றியூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்-ரசாயன கழிவு காரணமா?  title=

திருவொற்றியூர் கடற்கரையில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள். இப்படியாக ஒருவகை ஆமைகள் வடசென்னையின் கடற்கரை பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. சென்னை திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது

மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே கொடுக்கல - நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை கண்டு பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் சமீபத்தில் எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்ததுகாரணமாக இறந்ததா என அச்சமடைந்துள்ளனர். எனவே முறையாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்யவேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு  திருவொற்றியூர் சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் 6 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆமைகள் இறப்பிற்கான காரணம் என்ன?

ஆமைகள் மட்டுமன்றி, பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருப்பது, கடலில் கலக்கும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொடுட்களாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆமைகள் பொதுவாக, 80 முதல் 150 வயது வரை உயிர் வாழுமாம். இவை வாழும் இடங்களுக்கு ஏற்ப, இவற்றின் ஆயுளும் வேறு படுவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு: இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News