12 மணி நேரத்தில் உருவாகிறது பானி புயல்!! அச்சத்தில் மக்கள்!

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 27, 2019, 12:38 PM IST
12 மணி நேரத்தில் உருவாகிறது பானி புயல்!! அச்சத்தில் மக்கள்! title=

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு பானி என்று பெயரிடப்பட்டுள்ளது. பானி புயல் வருகிற 30-ம் தேதி தமிழகம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் நாளை முதல் 30 வரை அதிக மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே ஆயிரத்து 210 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த பானி புயல் 30ம் தேதி மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

Trending News