அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு EPS கடிதம்!!

அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!! 

Last Updated : Jun 26, 2018, 07:33 PM IST
அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு EPS கடிதம்!! title=

அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!! 

தமிழக சட்டசபையில் இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும் என பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, அணை பாதுகாப்பு சட்டத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...!

மத்திய அரசு இயற்றியுள்ள வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கக்கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது!

 

Trending News