தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் இறுதியில் கடுமையான வெயில் தொடங்கி மே மாதம் உச்சமடையும். அதன்பிறகு அக்னி வெயில் வாட்டிவதைத்துவிட்டுப் போகும். ஆனால், பருவநிலை மாறுபாடு காரணமாக இந்தாண்டு மார்ச் மாதமே வெயில் கொளுத்தியது. ஏப்ரல் துவகத்தில் பல மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரியை தாண்டியது. வெயிலின் தாக்கத்தால் அனலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த நிலப்பிரதேசங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ஊட்டியில் இந்த வாரம் கோடை விழா தொடங்குவதால் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது கொடைக்கானலுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கொடைக்கானலில் மீண்டும் தலைதூக்கும் போதைக் காளான் விற்பனை - 2 பேர் அதிரடி கைது!
மே மாதம்தான் கொடைக்கானலுக்கு சீசன் என்ற நிலையில் ஏப்ரல் துவக்கதிலேயே சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் உச்சக்கட்ட போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் அனைவரும் குவிவதால், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளன. மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் உரிய நேரத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் ஒருபாதை வழியில் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி
இதுபோதாதென்று, பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை செய்வதாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானல் பகுதிக்குள் செல்வதற்கு இரண்டு வழி பாதையை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR