தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூர் வடக்குமாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பாலஸ்தீன போரை உலகநாடுகள் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்வடக்கு மாவட்டம் சார்பாக கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள மலாயா கார்டனில் ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என சிறப்பு தொழுகை நடத்தி இறைவனின் தூதரான இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக பக்ரீத் போற்றிக் கொண்டாடினர்.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி! திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி முழக்கம்!
பெருநாள் தொழுகை நடைபெற்றபின் இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பாலஸ்தீனத்தில் போரில் பச்சிளம் குழந்தைகள் உட்பட கொல்லப்படுவதால் உலகநாடுகள் போரை தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பக்ரீத் பண்டிகையான இன்னாளில் கேட்டுக்கொண்டனர்.
இதில் திருவாரூர் வடக்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் கொடிக்கால்பாளையம் கிளைத் தலைவர் ஹபீப்முஹம்மது , கிளை துணைச்செயலாளர் ஹாஜாநஜிபுதீன் , கிளைப் பொருளாளர் யாக்கூப்உசேன் மற்றும் மாவட்டபேச்சாளர் மீரான், மாவட்டத்தலைவர் பீர்முஹம்மது ,ஊடக பொறுப்பாளர்: முஹம்மது ரிஃபாஸ் உட்பட 600க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என பக்ரீத் பண்டிகை தொழுகையில் கலந்துகொண்டனர்.
இதேபோல் பக்ரீத் பண்டிகை தொழுகை திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கூத்தாநல்லூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், குடவாசல்
நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ