நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்

சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை என்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 02:33 PM IST
நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம் title=

சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை என்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நகேந்திரன்., தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள்,. நிர்வாகிகள் என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நயினார் நகேந்திரனின் கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக கூறினார். பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடுகள் விவகாரத்தில் சிறப்பாக அதிமுக போராடி வருகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக பொருத்தவரை கட்சியின் தொண்டர்களுக்கும் கருத்து தெரிவிக்க இடம் உண்டு. பாஜகவில் இருந்துகொண்டே பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தால் திமுக போல நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார்.

குடியரசு நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பாரதி வேலு நாச்சியார் குயிலி உள்ளிட்ட அனைவரையும் அணிவகுப்பில் காட்சிப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றியையும், இதுபோன்றவர்களின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக இதனை காட்சி படுத்துவதால் அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வரலாற்றை கொண்டு செல்ல முடியும். இந்த ஆண்டு இந்திய குடியரசு பேரணியில் தமிழகத்தின் வாகன பங்கேற்கவில்லை கண்டிப்பாக அடுத்த ஆண்டு அங்கு இருக்கும் என்று கூறினார்.

ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News