சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. பல ரிலீஸ் தேதிகள் மாறிய நிலையில் நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியானது.
கோலிவுட்டின் முதல் பான்-இந்தியா படமாக கங்குவா அறிவிக்கப்பட்டது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பு 2000 கோடி வசூல் செய்யும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதனால் படம் மீது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. படம் முழுக்க அதிக சத்தம் இருப்பதாகவும், திரைக்கதை சரியில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டினார்.
350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் வந்த எதிர்மறை விமர்சனங்களால் கங்குவா படத்தின் வசூல் கடுமையாக பாதித்தது. இதனால் திரையரங்கிற்கு வந்த கூட்டமும் வெகுவாக குறைந்தது.
தற்போது பல திரையரங்கில் இருந்து கங்குவா படத்தை தூக்கி உள்ளனர். தமிழகத்தில் மோசமான வசூலை பெற்று இந்த ஆண்டின் மோசமான படங்களில் பட்டியலில் இணைந்துள்ளது கங்குவா.
கங்குவா படம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் கங்குவா படத்தை 100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.