சென்னை: மிகவும் தொன்மை வாய்ந்த விநாயகர் சிலை கடத்தலை சென்னை ஏர் கார்கோ சுங்கத்துறையினர் தடுத்தனர். 130 கிலோ எடையும், 5.25 அடி உயரமும் கொண்ட நிருத்ய கணபதி சிலை பித்தளையில் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இந்த பழம்பெருமை வாய்ந்த சிலையினை சுங்கத்துறையினர் கைப்பற்றினார்கள். இந்த சிலை ஏற்றுமதி செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொல்பொருள் மற்றும் பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் (Archaeological Survey of India under Antiquities and Treasures Act), இந்த சிலை பதிவு செய்யப்படவில்லை. பழங்கால சிற்ப சாஸ்திர நுட்பங்களின் (mythological traditions) அடிப்படையில் புராண மரபுகளை முழுமையாகப் பின்பற்றி இந்த நிருத்ய கணபதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட சிலை தேய்மானம் அடைந்திருந்ததும், அதில் கீறல்கள் இருந்ததும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்ததை உணர்த்துவதாக உயர் அதிகாரிகளின் கூறுகின்றனர். சிலை கைப்பற்ற பிறகு நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
READ ALSO | சசிகலாவின் அறிக்கைக்கு பதிலடியாக EPS, OPS வெளியிட்ட கூட்டறிக்கை
வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப சிலையை புனரமைப்பதற்காக, சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இந்த சிலை அனுப்பப்பட்டுள்ள விவரங்கள், விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட கணபதி சிலையை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை (Archaelogical Survey of India) நிபுணர்கள், சிலை 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், இது விஜயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். ,
இந்து மதத்தில் முழு முதல் கடவுளாக வணங்கப்படும் கணபதியின் 32 வெவ்வேறு வடிவங்களில் 15வது வடிவமாக நிருத்ய கணபதி கருதப்படுகிறார். நடனம் மற்றும் நுண்கலைகளில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், நிருத்ய கணபதியை வணங்க வேண்டும். நிருத்ய கணபதி, கலைகளில் தேர்ச்சியையும் வெற்றியையும் தருபவர் என்று நம்பப்படுகிறது.
நிருத்ய கணபதி வடிவம் முக்கியமாக கல் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் காணப்படுகிறது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள மிகப்பெரிய நிருத்ய கணபதியின் உலோக வடிவம் மிகவும் அரிதானது. சிலையின் பீடத்தில் இரண்டு ஜோடி துளைகள் காணப்படுகிறது. எனவே, இந்த சிலை உற்சவ மூர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை கூறுகிறது.
ALSO READ | ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR